கேலோ இந்தியா மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 2023
December 23 , 2023 587 days 527 0
முதலாவது கேலோ இந்தியா மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், ஹரியானா அணியானது 40 தங்கம், 39 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 105 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
25 தங்கம், 23 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் உத்தரப் பிரதேச அணியானது இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அணியானது 20 தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.