கேலோ இந்தியா விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திட்டம்
October 30 , 2026 14 hrs 0 min 40 0
உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2026-27 ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 2026-2033-34 காலகட்டத்திற்காக ரூ.1,856.67 கோடி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி, புதுமை, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதலீடு மற்றும் உற்பத்திக்கு ரூ.1,130 கோடியும், சர்வதேச தரச் சான்றிதழைப் பெறுவதற்கு ரூ.105 கோடியும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மண்டலங்கள் (SGMZs) உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சோதனை வசதிகள் மற்றும் வடிவமைப்பு மையங்களை ஒருங்கிணைக்கும்; குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் (MSMEs) இத்திட்டத்தின் கீழ் ஆதரவைப் பெறும்.
கேலோ பாரத் நிதி 2025, இந்தியாவிலேயே தயாரிப்போம் திட்டம் மற்றும் ஆத்மநிர்பார் பாரத் ஆகிய திட்டங்களுக்கு இணங்க ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய சந்தை அணுகல் ஆகியவற்றை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.