TNPSC Thervupettagam

கேள்வி நேரத்தை ரத்து செய்தல்

September 7 , 2020 1797 days 801 0
  • மத்திய அரசானது மழைக்காலக் கூட்டத் தொடருக்கான கேள்வி நேரத்தை ரத்து செய்யவும் பூஜ்ய நேரத்தைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
  • முந்தைய காலங்களிலும் கேள்வி நேரமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • எனினும் இது தேசிய அவசர நிலைக் காலத்தின் போது ரத்து செய்யப்படுகிறது.
  • மேலும் மத்திய சபையில் இரு அவையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்தியக் குடியரசுத் தலைவர் உரையாற்றும் போதும் கேள்வி நேரம் இருக்காது.
  • தற்போதைய கேள்வி நேர ரத்தானது ஒரு சாதாரணமான அமர்வின் போது மேற்கொள்ளப் பட்டுள்ளது.

கேள்வி நேரம்

  • இது நாடாளுமன்ற விதிகளின் படி நடத்தப்படுகின்றது.
  • நாடாளுமன்ற அமர்வின் முதல் 1 மணி நேரம் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
  • ஆனால் 2014 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் கேள்வி நேரமானது 11 மணியிலிருந்து 12 மணிக்கு மாற்றப்பட்டது.
  • சுதந்திரத்திற்கு முன்பு, 1893 ஆம் ஆண்டில் அரசாங்கத்திடம் முதல் கேள்வியானது கேட்கப் பட்டது.

கேள்விகளின் வகைகள்

  • நட்சத்திரக் குறியிடப்பட்ட கேள்வி : இந்த கேள்விகள் குரல்வழிப் பதிலை எதிர்நோக்குகின்றன. எனவே இதில் துணைக் கேள்விகளும் இடம் பெறும்.
  • நட்சத்திரக் குறி அல்லாத கேள்விகள்  : இந்தக் கேள்விகள் எழுத்து மூலமான பதிலை எதிர்நோக்குகின்றன. எனவே இதில் துணைக் கேள்விகள் இடம் பெறாது.
  • சிறு குறிப்புக் கேள்விகள் : இது 10 நாட்களுக்குள் ஒரு அறிவிக்கையின் மூலம் கேட்கப் படும் கேள்வியாகும்.
  • இதற்கு குரல் வழியாகப் பதிலளிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்