TNPSC Thervupettagam

கேவம் மேகங்கள்

March 12 , 2024 66 days 244 0
  • நாசா நிறுவனமானது, விண்வெளியில் இருந்து பார்க்கும் போது கேவம் (வட்ட வடிவ மீக்குளிர் நீர்க்குமிழ் மேகங்கள்) மேகங்களின் மிகவும் வியத்தகு காட்சியைக் காட்டும் மேகங்களின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
  • கேவம் மேகங்கள், துளை-கொண்ட மேகங்கள் அல்லது ஃபால்ஸ்ட்ரீக் துளைகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
  • இந்த அசாதாரண மேகங்கள் விமானங்களால் ஏற்படுகின்றன.
  • மீக்குளிர் (நீரின் உறைநிலைக்கு கீழான வெப்பநிலை கொண்ட, ஆனால் திரவமாக உள்ள) நீர் துளிகள் கொண்ட நடுநிலை மேகங்களான உயர்திரள் மேகங்களின் ஓரங்கள் வழியாக விமானங்கள் பறக்கும் போது கேவம் மேகங்கள் உருவாகின்றன.
  • விமானத்தைச் சுற்றி காற்று நகரும் போது, மாறா வெப்பச் செயல்முறை எனப்படும் ஒரு செயல்முறை நீர்த்துளிகளைப் பனி படிகங்களாக உறைய வைக்கின்றது.
  • இந்தப் பனிக்கட்டிகள் இறுதியில் கனமாகி, வானத்தில் இருந்து இறங்கி மேக அடுக்கில் ஒரு துளையினை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்