கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பணியாளர்களுக்கான சர்வதேச ஒன்றிணையும் தினம் – மார்ச் 25
March 28 , 2021 1584 days 533 0
இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் அலெக்கோலெட் என்பவர் கடத்திச் செல்லப்பட்ட நாளினை நினைவு கூரும் விதமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
இவர் கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு முன்னாள் பத்திரிக்கையாளராவார்.
இவர் 1985 ஆம் ஆண்டு ஒரு துப்பாக்கி ஏந்திய ஒரு நபரால் கடத்தப்பட்டார்.
அவரது உடல் 2009 ஆம் ஆண்டில் லெபனானின் பெகா பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப் பட்டது.
இத்தினம் ஐ.நா.வின் பணியாளர்கள் மற்றும் அமைதி காக்கும் படையினர், அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் பணியாளர்கள் ஆகியோரைப் பாதுகாக்கச் செய்வதற்கான ஒரு தீர்மானத்தை வலுப்படுத்தவும், அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீதியினை வேண்டுவதற்குமான ஒரு தினமாக கடைபிடிக்கப் படுகிறது.