தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மத்திய கருவிகள் அடையாளப் பதிவுகளை (Central Equipment Identity Register - CEIR) வெளியிட முடிவு செய்திருக்கின்றது.
நாடெங்கிலும் கைபேசிகளின் திருட்டு மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போலிக் கைபேசிகளைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது.
CEIR என்பது ஒவ்வொரு கைபேசி சாதனத்தையும் பிரத்தியேகமாகக் கண்டறியக்கூடிய 15 இலக்க எண்களைக் கொண்ட சர்வதேச கைபேசிக் கருவி அடையாளங்களின் (IMEI - International Mobile Equipment Identities) தரவுதளமாகும்.
இந்த தரவுதளம் பின்வரும் மூன்று பட்டியலில் கைபேசிகளைக் கொண்டிருக்கும்.
வெள்ளைப் பட்டியல் : வெள்ளைப் பட்டியலில் IMEI எண்களுடன் இருக்கும் கைபேசிகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும்.
கறுப்புப் பட்டியல் : கறுப்புப் பட்டியலில் உள்ள கைபேசிகள் திருடப்பட்ட கைபேசிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த கைபேசிகள் வலையமைப்பை அணுக அனுமதிக்கப் படுவதில்லை.
சாம்பல் நிறப் பட்டியல் : இந்தப் பட்டியலில் உள்ள கைபேசிகள் குறிப்பிட்ட தரங்களை பூர்த்தி செய்யாமல் உள்ளன. இவை மேற்பார்வையின் கீழ் வலையமைப்பை அணுக அனுமதிக்கப்படும்.