கைபேசியுடனான நேரடி தகவல் தொடர்பு செயற்கைக்கோள் - ஸ்பேஸ் எக்ஸ்
April 18 , 2024 379 days 331 0
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, ஃபால்கன் 9 என்ற ஏவுகலம் மூலமாக ஸ்டார்லிங் வலையமைப்பின் கைபேசியுடனான நேரடித் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
அந்நிறுவனம் ஆனது ஆறு கைபேசியுடனான நேரடி தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் உட்பட 21 புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளன.
இது விண்ணில் ஏவப்பட்ட முதல் வகையிலான கைபேசியுடனான நேரடித் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
கைபேசியுடனான நேரடித் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆனது உரை, இணையம் மற்றும் கைபேசி வலையமைப்புகளுக்கு "வானம் பரவியுள்ள எல்லா இடங்களிலும்" சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விண்வெளியில் உள்ள கைபேசி சேவை அலைபரப்பி போன்று செயல்படும் கைபேசி உடனான நேரடி தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் ஆனது LTE கை பேசிகளில் செயல்படும்.
இது பிற சேவை வழங்கீட்டு நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்ற பகுதிகளான தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பயனர்களுக்கு அதிவேக இணையச் சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.