கைமூர் வனவிலங்கு சரணாலயத்தை அந்த மாநிலத்தின் இரண்டாவது புலிகள் சரணாலயமாக மேம்படுத்துவதற்கான திருத்தப்பட்ட ஒரு திட்டத்திற்கு பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது அங்கீகரிக்கப்பட்டதும், மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் வால்மீகி புலிகள் சரணாலயத்திற்குப் (VTR) பிறகு பீகாரின் இரண்டாவது புலிகள் சரணாலயமாக இது இருக்கும்.
1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 38V ஆம் பிரிவின் விதிகளின்படி புலிகள் சரணாலயங்கள் மாநில அரசுகளால் அறிவிக்கப்படுகின்றன.
இந்த முன்மொழிவை தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.