கையூட்டுச் செய்திகளின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
கையூட்டுச் செய்திகள் என்பது பணம் அல்லது பிற உதவிகளைப் பெற்றுக் கொண்டு அச்சு அல்லது மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்பப் படும் எந்தவொரு செய்தி அல்லது ஆய்வு என வரையறுக்கப் படுகின்றது.
இந்தியப் பத்திரிக்கை மன்றம் 2018-19 ஆம் ஆண்டின் போது தேர்தல் ஆணையம் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து கையூட்டுச் செய்திகள் குறித்த 58 புகார்களைப் பெற்றுள்ளது.
இது கையூட்டுச் செய்தியைத் தண்டனைக்குரிய ஒழுங்கீனச் செயலாக ஏற்படுத்தும் நோக்கில் 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைத் திருத்தப் பரிந்துரைத்துள்ளது.