ஐக்கிய நாடுகள் அவையானது நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி என்பவரை நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்காக வேண்டி ஒரு பிரச்சாரகராக நியமித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பிராட் ஸ்மித், STEM ஆர்வலர் வாலன்டினா முனோஸ் ரபானால் மற்றும் K. பாப் சூப்பர் ஸ்டார் BLACKPINK ஆகியோரும் புதிய நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான பிரச்சாரகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நிலையான மேம்பாட்டிற்கான 2030 ஆம் ஆண்டின் செயல்பாட்டு நிரல்களை முன்னேற்றுவதற்கு இவர்களின் பங்கு ஒருங்கிணைந்ததாக இருக்கும்.