கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லை சார்ந்த பதட்டச் சூழல்கள் காரணமாக ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
இது மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நிகழும் முதல் இந்தியா-சீனா மக்கள் பரிமாற்றத்தைக் குறிக்கிறது.
இந்த யாத்திரையானது ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாத்திரைக்கான இரண்டு அதிகாரப்பூர்வ வழித்தடங்கள் உத்தரக்காண்டில் உள்ள லிபுலேக் கணவாய் (1981 ஆம் ஆண்டு முதல்) மற்றும் சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் (2015 ஆம் ஆண்டு முதல்) ஆகும்.
கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி ஆகியவை திபெத்தில், கைலாய மலையின் தெற்கு அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
மானசரோவர் ஏரி உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
இந்த யாத்திரை இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பான் சமயத்தினைப் பின்பற்றுபவர்களுக்கு அதன் சமய மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக அறியப் படுகிறது.