கைவிடப்பட்டோருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு : மகாராஷ்டிரா
January 18 , 2018 2660 days 984 0
மகாராஷ்டிரா அரசாங்கமானது மாநிலத்தில் உள்ள கைவிடப்பட்டோர்களுக்காக 1 சதவீத இட ஒதுக்கீட்டினை பொதுப்பிரிவில் வழங்கியுள்ளது.
இது போன்ற கொள்கையினை கொண்டு வந்த முதலாவது மாநிலம் மகாராஷ்டிராவே ஆகும்.
இந்த இட ஒதுக்கீடானது இணை இட ஒதுக்கீடு என்றழைக்கப்படுகிறது. இணையான இடஒதுக்கீடு என்பது, பொதுப் பிரிவில் உள்ள ஒட்டு மொத்த வேலை வாய்ப்பில் 1 சதவீதம் மட்டும் கைவிடப்பட்டோருக்காக ஒதுக்கப்படுவது ஆகும்.
இந்த நடவடிக்கையின் மூலமாகத் தங்களது சாதியினை வெளிப்படுத்த இயலாத கைவிடப்பட்டோர் பலனடைய உள்ளனர்.