ஜுன் 18 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் எனுமிடத்தில் கொடி சத்தியாகிரகத்தினை கடைபிடிப்பதற்கான ஒரு நிகழ்வினை கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
கொடி சத்தியாகிரகம் என்பது விடுதலைப் போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டு பிரித்தானிய அரசினை கதிகலங்கச் செய்த ஒரு இயக்கமாகும்.
மேலும் இது சுதந்திரப் போராட்டத்திற்குப் புத்துயிர் அளித்த ஓர் இயக்கமும் ஆகும்.
இது ஜண்டா சத்தியாகிரகம் எனவும் அழைக்கப்படுகிறது.
இது 1923 ஆம் ஆண்டில் ஜபல்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் நடத்தப் பட்டது.