TNPSC Thervupettagam

கொடைக்கானலின் பெருங்கற்கால கல் திட்டை

September 29 , 2025 4 days 60 0
  • கொடைக்கானலில் உள்ள 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கல் திட்டைகள், முதன்முதலில் 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களால் ஆய்வு செய்யப்பட்டன.
  • கல் திட்டைகள் ஆனது பெரும்பாலும் பாறை முகடுகள் அல்லது இயற்கையான பாறை அமைப்புகளுக்கு அருகிலுள்ள சரிவுகளில் சீர்ப்படுத்தப் படாத கற்களைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டன.
  • கிறித்துவப் பாதிரியாளர்களால் பதிவு செய்யப்பட்ட கல் திட்டைகளில் 50 சதவீதத்திற்கும் குறைவானவையே தற்போது நன்கு புலப்படும் வகையிலும் மற்றும் சேதமடையாமலும் அப்படியே உள்ளன.
  • பெருமாள் மலைக்கு அருகிலுள்ள பேத்துப்பாறையில், சில கல் திட்டைகள் இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தினால் (ASI) வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன.
  • தாண்டிக்குடியில் பல கல் திட்டைகள் தாவரப் பரவலால் மறைந்துவிட்டன அல்லது காலப் போக்கில் சேதமடைந்துள்ளன.
  • மருதநதி ஆற்றின் அருகே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் அப்பகுதியில் இரும்பு காலத்திற்கு முந்தைய தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தின.
  • 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த புதைவிடத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள் மற்றும் சிவப்பு நிறப் பவள மணிகள் போன்ற கலைப்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்