TNPSC Thervupettagam

கொடைக்கானல் மலைகளில் பயிர்த் தாளடி எரிப்பு

November 12 , 2025 4 days 38 0
  • தமிழ்நாட்டின் கொடைக்கானல் மற்றும் பழனி மலைகளில் பயிர்த் தாளடிகளை எரிக்கும் நிகழ்வு அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
  • விவசாயிகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறுவடைக்குப் பிறகு பயிர்த் தாளடிகளை எரித்து அடுத்த விதைப்புப் பருவத்திற்கு வேண்டி அந்நிலத்தைத் தயார் படுத்துகிறார்கள்.
  • நில அடுக்கு முறை விவசாயம் மற்றும் மனிதவளப் பற்றாக்குறை மலைப்பாங்கான நிலப்பரப்பில் கைமுறையாகவோ அல்லது இயந்திர ரீதியாகவோ கழிவுகளை அகற்றுவதை கடினமாக்குகிறது.
  • சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த எரிப்பு மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகளைக் கொன்று தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதன் மூலம் மண் வளத்தைப் பாதிக்கிறது என்று எச்சரிக்கின்றனர்.
  • பயிர்த் தாளடி எரிப்பிலிருந்து பறக்கும் தீப்பொறிகள் காட்டுத் தீயை பற்ற வைத்து மலைகளின் சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களை சேதப்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்