TNPSC Thervupettagam

கொம்புக்கண் பேய் நண்டு – ஆந்திரப் பிரதேசம்

December 10 , 2025 15 hrs 0 min 27 0
  • கொம்புக்கண்கள் கொண்ட பேய் நண்டு, புள்ளிகளுடன் கூடிய லேசான கால்கள் கொண்ட நண்டை (பாறைப் பதுங்கி நண்டுகள்) வேட்டையாடுவதற்கான முதல் உறுதிப் படுத்தப் பட்ட நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.
  • தாழ் ஓத அலைகளின் போது ருஷிகொண்டா கடற்கரையில் இது நிகழ்ந்தது.
  • பாறைப் பதுங்கி நண்டுகள் பொதுவாக பாறை பிளவுகளில் வாழ்கின்றன அதே நேரத்தில் கொம்புக்கண்கள் கொண்ட பேய் நண்டுகள் பொதுவாக மணல் பரப்புகளில் காணப்படுகின்றன.
  • இந்த வேட்டையாடுதல் ஆனது அவற்றின் வாழ்விடங்களின் தற்காலிகக் குறுக்கிடல் மற்றும் கொம்புக்கண்கள் கொண்ட பேய் நண்டின் உணவு தேடும் நடத்தையின் விரிவாக்கத்தினைக் குறிக்கிறது.
  • ஓசிபோட் இனத்தைச் சேர்ந்த பேய் நண்டுகள், மணல் நிறைந்த ஓத அலைகளுக்கு இடையேயான மண்டலங்களில் காணப்படும் முக்கிய இனங்கள் ஆகும்.
  • இந்தியாவின் கடற்கரையில் ஆறு பேய் நண்டு இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதோடு அவற்றில், O. ப்ரீவிகார்னிஸ், O. மேக்ரோசெரா மற்றும் O. கார்டிமானஸ் ஆகிய மூன்று இனங்கள் ருஷிகொண்டா கடற்கரையில் காணப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்