TNPSC Thervupettagam

கொரோனா வைரஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளின் தரவரிசை

August 16 , 2021 1454 days 661 0
  • உலக நாடுகளுக்கான கொரோனா வைரஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளின் தர வரிசையில் இந்தியா ஆறு இடங்கள் பின்தள்ளப்பட்டு 32வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • UNAIDS அமைப்பின் சுகாதாரப் புதுமைப் பரிமாற்ற அமைப்புடன் இணைந்து ஸ்டார்ட் அப் பிளிங்க் (StartupBlink) என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்ட அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • பெருந்தொற்றினை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வுகளின் அடிப்படையில் உலகின் முதல் 40 நாடுகளையும் முதல் 100 நகரங்களையும் இந்த அறிக்கை தரவரிசைப்படுத்துகிறது.
  • இந்தியாவின் பெங்களூரு (49வது) மற்றும் புதுடெல்லி (55வது) ஆகிய இரு நகரங்கள் முதல் 100 இடங்களில் உள்ளன.
  • இந்த ஆண்டு இந்தியாவில் கோவிட் தொடர்பான 15 புதுமையான கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு
    • தடுப்பு நடவடிக்கையில் நான்கு கண்டுபிடிப்புகள்
    • உதவி மற்றும் ஆதரவு நடவடிக்கைகளில் மூன்று,
    • தகவல் வழங்கீட்டில் ஒன்று,
    • சிகிச்சை வழங்கலில் மூன்று மற்றும்
    • பரிசோதனையில் நான்கு
  • அமெரிக்க நாடானது இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்