வரலாற்றில் இல்லாத வறட்சி காரணமாக கொலராடோ ஆற்றுப்படுகையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக முதல்முறையாக அமெரிக்காவின் மத்திய அரசு அறிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல், கொலராடோ ஆற்றுப்படுகையில் நீடித்த வறட்சியானது தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்த தொடர் வறட்சியானது, பல ஆண்டுகளாக நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து வந்த இந்த ஆற்றுப் படுகையிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைக்க வழி வகுத்துள்ளது.
மீயட் ஏரி மற்றும் பாவெல் ஏரி (Lake Mead and Lake Powell) ஆகியவை இந்த தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு உள்ளான இரு ஏரிகளாகும்.
கொலராடோ நதியானது ராக்கி மலைகளிலிருந்து தென்மேற்கு அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் பாய்கின்றது.
இந்த நதிக்கான நீர்வரத்தானது ராக்கி மற்றும் வாசாட்ச் மலைகளிலுள்ள பனிப் பாறைகள் உருகுவதன் மூலம் கிடைக்கின்றன.