உணவு உற்பத்தி செய்யும் விலங்குகள், கோழிப் பண்ணை, நீர் தொடர்பான தொழில்கள் மற்றும் விலங்குத் தீவனப் பொருட்கள் ஆகியவற்றிற்காக கொலிஸ்டின் மற்றும் அதன் கலவைகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தினைத் தடை செய்வதற்கான ஆணையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
இது கொலிஸ்டின் கொள்கலனின் மீது இந்தத் தகவலைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
கொலிஸ்டின் என்பது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் விலங்குகளைக் காப்பாற்றுவதற்காகக் கடைசி நேரத்தில் வழங்கப்படும் ஒரு நோயெதிர்ப்பு மருந்தாகும்.
இது கிராம் - நெகட்டிவ் பேசில்லிற்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகின்றது.
இது உணவுச் சங்கிலி வழியாக நுழையும் போது அதிகரித்து வருகின்ற நோயாளிகள் இந்த மருந்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன.