TNPSC Thervupettagam

கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு குறித்து உச்ச நீதிமன்றம்

September 25 , 2026 7 days 88 0
  • தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்திற்கு எதிரான சவாலை விசாரிக்கும் போது உச்ச நீதிமன்றம் கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு அமைப்பை ஆதரித்தது.
  • தேர்தல் ஆணையர் தேர்வு செயல்முறையுடன் கொலீஜியத்தை/நீதிபதிகள் தேர்வுக் குழுவை மத்திய அரசு ஒப்பிடுவது "கவலைக்குரியது" என்று நீதிபதி தீபங்கர் தத்தா தெரிவித்தார்.
  • நீதித்துறை நியமனங்களில் நிர்வாகத் துறைக்கு பங்கு இருப்பதாகவும், கொலீஜியத்தின்/நீதிபதிகள் தேர்வுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
  • கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைத்த பெயர்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மத்திய அரசு ஒப்புதல் அளிப்பது குறித்தும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
  • கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு என்பது மூத்த நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யும் அமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்