TNPSC Thervupettagam

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் 150வது ஆண்டுவிழா

January 13 , 2020 1995 days 658 0
  • சித்தரஞ்சன் இரயில் பெட்டித் தொழிற்சாலை, தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் மற்றும் இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கு இந்தியப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்நிகழ்வின் போது கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையானது “ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்” என்று மறுபெயரிடப்பட்டது.
  • அவர் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஆவார்.
  • சுந்தரவனக் காடுகள் பிராந்தியத்தில் 200 பழங்குடி சிறுமிகளுக்காக கௌசல் விகாஸ் கேந்திரா மற்றும் பிரிதிலதா சத்ரா ஆவாஸ் ஆகியத் திட்டங்களையும்  பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • கௌசல் விகாஸ் கேந்திராவானது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகும்.
  • அவை பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்