கொள்கை வடிவமைக்கும் குழுக்களின் வலையமைப்பிற்கான ஆசியான் – இந்தியா அமைப்பின் 6வது வட்ட மேசை மாநாடு
August 28 , 2020 1755 days 620 0
கொள்கை வடிவமைக்கும் குழுக்களின் வலையமைப்பிற்கான ஆசியான் – இந்தியா அமைப்பின் 6வது வட்ட மேசை மாநாடானது காணொலி வழியாக நடத்தப்பட்டது.
இந்த வட்ட மேசை மாநாட்டின் கருத்துரு, “ஆசியான்-இந்தியா; கோவிட் – 19 தொற்றிற்குப் பின்பான காலத்தில் பங்களிப்பை வலுப்படுத்துதல்” என்பதாகும்.
இது கொள்கை வடிவமைக்கும் குழுக்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், அறிஞர்கள், ஊடகம் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டுள்ளது.
இது எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிமுறைகள் குறித்து அரசிற்கு கொள்கை ரீதியிலான தரவுகளை அளிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற 7வது ஆசியான் – இந்தியா மாநாட்டின் (தாய்லாந்தில் நடைபெற்ற) போது ஏற்படுத்தப் பட்டது.