மத்திய கூட்டுறவு அமைச்சர், புது டெல்லியில் நடைபெறும் நகர்ப்புற கூட்டுறவு கடன் துறை குறித்த கோ-ஆப் கும்பம் 2025 எனப்படும் சர்வதேச மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
தேசிய நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் லிமிடெட் (NAFCUB) மற்றும் நகர்ப்புற அமைப்புகள் ஆனது கூட்டுறவு வங்கி கட்டமைப்புகளை மறு வடிவமைப்பு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடும்.
ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு நகரத்திலும் ஒரு நகர்ப்புறக் கூட்டுறவு வங்கியை நிறுவுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூட்டுறவுத் துறைக்கான நிபுணர்களைப் பயிற்றுவிப்பதற்காக திரிபுவன் கூட்டுறவு பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
சஹாகர் டிஜிபே மற்றும் சஹாகர் டிஜிலோன் செயலிகள் போன்ற டிஜிட்டல் முன்னெடுப்புகள் ஆனது சிறிய நகர்ப்புறக் கூட்டுறவுச் சங்கங்கள் அவற்றை டிஜிட்டல் வழி பண வழங்கீடுகளுக்குத் தகவமைக்க உதவும்.