தற்சார்பு இந்தியா/ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் 2040 ஆம் ஆண்டிற்குள் கோகோ உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான வழிகாட்டுதல் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
ஆண்டுக்கு 866 மில்லியன் டாலர்களைத் தாண்டும் கோகோ இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2026-28 ஆம் ஆண்டுகளில் கோகோவுக்கான தேசிய இயக்கம் தொடங்கப்படும்.
ஆரம்ப கட்டமாக சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் பல்மரபுவழி விதைத் தோட்டங்கள் உருவாக்கப்படும்.
விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், கோகோ சாகுபடியை 1 லட்சம் ஹெக்டேர் வரை விரிவுபடுத்துவதையும் இந்த வழிகாட்டுதல் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, 2040 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய கோகோ பதப்படுத்தும் மையமாக மாறுவதையும் இந்தியா இலக்காகக் கொண்டு உள்ளது.