இந்திய இராணுவமானது கோகோ (அரசாங்கத்திற்குச் சொந்தமானது மற்றும் ஒப்பந்ததாரரால் செயல்படுத்தப்படுவது) என்ற மாதிரியின் மீதான தனது பணியைத் தொடங்கி உள்ளது.
இந்த மாதிரியானது இந்திய ராணுவத்தின் பட்டறைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
இந்திய இராணுவம் எப்போதுமே செயல்படத் தயாராக இருப்பதை இந்தப் பட்டறைகள் உறுதி செய்வதால் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
போர்த் திறனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்புச் செலவினங்களை மீண்டும் சமநிலைப் படுத்துவதற்கும் லெப்டினன்ட் ஜெனரல் டிபி. செகாத்கர் (ஓய்வு) குழுவின் பரிந்துரைகளில் ஒன்று கோகோ மாதிரி (GOCO model) ஆகும்.
கோகோ மாதிரியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தனியார் தொழிற் சாலைகளால் நிர்வகிக்கப்பட இருக்கின்றன.