கோச் மித்ரா செயலி மூலம் அளிக்கப்படும் பயணிகளின் குறைகளைத் தீர்ப்பதில் மோசமாக செயல்படும் இந்திய இரயில்வேயின் மூன்று மண்டலங்களில் தெற்கு ரயில்வேயும் ஒன்றாக உள்ளது.
சிறப்பாக செயல்படும் முதல் ரயில்வேயாக கிழக்கு மண்டல ரயில்வேயும் அதனைத் தொடர்ந்து மேற்கு மத்திய ரயில்வேயும், கிழக்கு கடற்கரை ரயில்வேயும் உள்ளன.
கோச் மித்ரா செயலியானது இரயில்களில் தூய்மை, குடிநீர் வழங்கல், துணிகளின் தரம் மற்றும் மின்கருவிகள் தொடர்பான குறைகளை தெரிவிக்க பயணிகளுக்கு உதவும் ஒரு ஒற்றைச் சாளர அமைப்பாகும்.