கோடக் மஹிந்திரா வங்கி – மைக்ரோ ஏ.டி.எம் இயந்திரங்கள்
October 17 , 2021 1432 days 726 0
தனியார் வங்கி நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கியானது நாடு முழுவதும் மைக்ரோ (சிறு) தானியங்கி பணம் வழங்கும் (ஏ.டி.எம்) இயந்திரங்களைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பணம் பெறும் அட்டைகளை வைத்துள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பணம் எடுத்தல் மற்றும் கணக்கு நிலுவைகளைச் சரிபார்த்தல் போன்ற முக்கிய வங்கிச் சேவைகளுக்கு வேண்டி கோடக் மைக்ரோ ஏ.டி.எம். இயந்திரங்களை உபயோகிக்கலாம்.
ஏ.டி.எம். இயந்திரங்களின் சிறிய அளவு வடிவமான மைக்ரோ ஏ.டி.எம் இயந்திரங்கள் ஒரு சிறிய கையடக்கச் சாதனமாகும்.
இந்த வங்கியானது மைக்ரோ ஏ.டி.எம். இயந்திரங்களைத் தொடங்க, அதன் விரிவான வணிகத் தொடர்பாளர் கட்டமைப்பினைப் பயன்படுத்துகிறது.