TNPSC Thervupettagam

கோபர்தன் (GOBARdhan) மத்திய துறை திட்டம் புதுப்பிப்பு

September 16 , 2026 5 days 65 0
  • கோபர்தன் (GOBARdhan) மத்திய துறை திட்டமானது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று ₹23,731 கோடி மொத்த ஒதுக்கீட்டுடன் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தியாவில் அழுத்தப்பட்ட உயிரி வாயு (CBG) உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க இத்திட்டம் 2035-36 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
  • உள்நாட்டு CBG உற்பத்தியை கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரிப்பதையும், பெரிய அளவிலான தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • கரிம கழிவுகளை பயனுள்ள ஆற்றல் மற்றும் பிற தயாரிப்புகளாக மாற்றுவதன் மூலம் சுழற்சி உயிரியல் பொருளாதாரத்தை இத்திட்டம் ஆதரிக்கும்.
  • மத்திய அமைச்சரவை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்