ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடைபெறும் பலதரப்பு வான்படைப் பயிற்சியான கோப்ரா வாரியர் 22 என்ற பயிற்சியில் பங்கு பெறுவதற்கு தனது விமானங்களை அனுப்புவதாக இல்லை என இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால் தீவிரமடைந்த ஒரு நெருக்கடி நிலையின் காரணமாக இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பயிற்சியானது, 2022 ஆம் ஆண்டு மார்ச் 06 முதல் 27 வரையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வாடிங்டன் நகரில் நடைபெற உள்ளது.