கோயம்புத்தூரில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நிறுவனம்
October 21 , 2025 15 days 79 0
தமிழ்நாடு அரசானது, பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் கோவையில் செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு சிறப்பு மையத்தை அமைக்க உள்ளது.
கோயம்புத்தூர் நகரில் தற்போது 1,592 பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்பதோடு அவை மொத்தம் 37 மில்லியன் அமெரிக்க டாலர்களை துணிகர முதலீட்டு நிதியாகப் பெற்றுள்ளன.
பள்ளி அளவில் செயற்கை நுண்ணறிவு கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்பதோடு மேலும் மாநிலம் முழுவதும் துணிகர மூலதன ஆதரவுடன் AI மையங்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன.
இந்த நிறுவனம் ஆனது AI அடிப்படைகள், இயந்திரக் கற்றல், தரவு அறிவியல், AI நெறிமுறைகள் மற்றும் பயன்பாட்டு AI ஆகியவற்றில் கலப்பு முறையிலான கற்றல் மாதிரி மூலம் பயிற்சி அளிக்கும்.