TNPSC Thervupettagam

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான விரிவான செயல் திட்டம் 2041

July 7 , 2025 16 hrs 0 min 42 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான விரிவான செயல் திட்டம் 2041 என்ற திட்டத்தினை அறிவித்தார்.
  • இந்தத் திட்டமானது புவியிடஞ்சார்ந்த தகவல் அமைப்பு (GIS) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • இது 1,531 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவிலான கோயம்புத்தூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியை உள்ளடக்கியது.
  • இந்தத் திட்டமானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள நகர மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் இயக்குநரகத்தால் தயாரிக்கப்பட்டது.
  • இத்திருத்தப்பட்ட நில பயன்பாட்டுத் திட்டத்தில், சுமார் 33% பரப்பளவு ஆனது பசுமை மண்டலமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
  • இதில் மீதமுள்ள நிலம் ஆனது நகர்ப்புற மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அனுமதிக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, 2041 ஆம் ஆண்டிற்குள் 60 லட்சம் (6 மில்லியன்) மக்கள்தொகை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்