தமிழ்நாட்டில் கோயில் நிதியைக் கல்லூரிகள் கட்டுவதற்கு வேண்டிப் பயன்படுத்தும் பிரச்சினை குறித்து சமீபத்தில் ஓர் சர்ச்சை வெடித்தது.
முதன்மையாக முந்தைய மதராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான இந்த மாதிரியானது, இன்று வரையில் தொடர்கின்ற ஒரு சட்டத்திலிருந்து அதன் வலிமையைப் பெறுகிறது.
மேலும் இது தென்னிந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1817 ஆம் ஆண்டு சமய அறக்கட்டளை மற்றும் இறையுரிமைப்பாடு ஒழுங்குமுறை மூலம், கிழக்கிந்திய நிறுவனம் சமய அறக்கட்டளைகளை ஒழுங்குபடுத்துவதைச் சார்ந்த ஆரம்பகாலச் சட்டப்பூர்வ கட்டமைப்பை அமைத்தது.
1858 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணி இந்திய ஆட்சிப் பிரதேசங்களின் மீது நேரடி கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட போது, சமய விவகாரங்களில் தலையிடுவதை பிரிட்டிஷ் அரசு கட்டுப்படுத்திக் கொள்ளும் என்று கூறி விக்டோரியா மகாராணி ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சமய நிறுவனங்களை அரசாங்கம் மேற்பார்வையிடும் கருத்தாக்கம் வடிவமாக்கப் பட்டது.
நீதிக் கட்சி ஆட்சியாளர்களின் ஆரம்பகாலச் சட்ட தலையீடுகளில் ஒன்று ‘1922 ஆம் ஆண்டின் மசோதா எண் 12: இந்து சமய அறநிலையச் சட்டம்’ என்பதாகும்.
ஒரு கோவிலுக்கு வழங்கப்படும் நிதியை மதச்சார்பற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியுமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினையாகும்.
இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, 1925 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட போது தீர்க்கப் பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறைச் சட்டம், 1959 ஆகும்.
இது உபரி நிதியை பயன்படுத்திக் கொள்ளும் அந்த விதியை தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
1959 ஆம் ஆண்டு சட்டத்தின் 36வது பிரிவு, சமய நிறுவனங்களின் அறங்காவலர்கள் இச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும், வேண்டி ஆணையரின் முன் அனுமதியுடன், எந்தவொரு உபரி நிதியையும் வழங்க அனுமதிக்கிறது.
சோழப் பேரரசு உச்சத்தில் இருந்த கி.பி 970 ஆம் ஆண்டு முதல், கோயில்கள் இறையாண்மை கொண்ட ஆட்சியாளர்களிடமிருந்து ஏராளமான நன்கொடைகளைப் பெற்றுள்ளன.
கடந்த நூற்றாண்டில், மதராஸ் மாகாணத்திலிருந்து தோன்றிய சுயமரியாதை இயக்கம், கோயில்களை ஒழுங்குபடுத்துவதையும் அவற்றின் வளங்களை மேற்பார்வையிடுவதையும் சாதி எதிர்ப்பு மீதான சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதியது.
இது இல்லாமல், 1936 மற்றும் 1947 ஆம் ஆண்டுகளில் கோயில் நுழைவுச் சட்டம் உருவாகியிருக்காது.
இன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த அர்ச்சகர்களை அரசாங்கங்கள் நியமித்த சில மாநிலங்களில் அடங்கும்.