TNPSC Thervupettagam

கோயில் வழிபாட்டில் சமத்துவம்

September 21 , 2025 14 hrs 0 min 15 0
  • வழிபாட்டில் சமத்துவம் என்பது வாதத்திற்கு உட்பட்டது அல்ல (மாற்றத்தகாதது) என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
  • கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாதி அடிப்படையிலான கோயில் நுழைவு மறுப்பு தொடர்பான இரண்டு மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது.
  • ஒரு மனு சாதி பாகுபாட்டை மறுத்தும்; மற்றொன்று பட்டியலிடப்பட்ட சாதியினர் வகுப்பினைச் சேர்ந்த பக்தர்களுக்கு கோயில் நுழைவு மறுக்கப்பட்டதாகக் கூறியும் முன் வைக்கப்பட்டன.
  • வைக்கம் சத்தியாகிரகம் (1924–25), குருவாயூர் சத்தியாகிரகம் (1931–32), மற்றும் 1936 ஆம் ஆண்டு கோயில் நுழைவுப் பிரகடனம் போன்ற முக்கிய இயக்கங்களை நீதிபதி B. புகழேந்தி நினைவு கூர்ந்தார்.
  • 1939 ஆம் ஆண்டு மதராஸ் கோயில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பட்டியலிடப்பட்ட சாதியினர் வகுப்பினைச் சேர்ந்த பக்தர்கள் 1939 ஆம் ஆண்டில் நுழைய அனுமதிக்கப்பட்டதை நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • இந்த கோயில் நுழைவானது A. வைத்தியநாத ஐயர் மற்றும் L.N. கோபாலசாமி மற்றும் P. கக்கன் மற்றும் பலர் முன்னிலையில் நடைபெற்றது.
  • மகாத்மா காந்தி இதை ஓர் ஆன்மீக வெற்றி என்று கூறி, 1946 ஆம் ஆண்டில் பட்டியலிடப் பட்ட சாதியினர் வகுப்பினைச் சேர்ந்த பக்தர்களுடன் கோயிலுக்கு விஜயம் செய்தார்.
  • 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்விலிருந்து பெறப்பட்ட செய்தி, வழிபாட்டில் சாதி முறைகளுக்கு இடமில்லை என்பதுதான் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • கடந்த காலச் சீர்திருத்தங்கள் இருந்த போதிலும், 2025 ஆம் ஆண்டில், கரூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் பட்டியலிடப்பட்டச் சாதியினர் வகுப்பினைச் சேர்ந்த பக்தர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டது.
  • அந்தக் கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையானது, அங்கு எந்தப் பாகுபாடும் மேற் கொள்ளப் படவில்லை என்று கூறி, 2018 ஆம் ஆண்டு தடை உத்தரவை நீக்க முயன்றது.
  • நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, பட்டியலிடப்பட்டச் சாதியினர் வகுப்பினைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலின் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
  • அத்தகைய நுழைவு ஆனது நீதித்துறை உத்தரவு மூலம் மட்டுமே நடந்தது நாணத்தக்க நிகழ்வு என்று நீதிமன்றம் கூறியது.
  • 2018 ஆம் ஆண்டு முதல் நிர்வாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது, நீண்டகால உரிமைகள் மறுப்புக்கு வழிவகுத்தது என்று நீதிபதி கூறினார்.
  • கோயில் நுழைவின் போது ஏற்பட்ட தடைகள் கலவரத்திற்கும் குற்றவியல் வழக்குக்கும் வழி வகுத்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்