இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது (Indian Railway Catering and Tourism Corporation – IRCTS) கோர்டெலியா கடற்பயண நிறுவனத்துடன் கைகோர்த்து அதனுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
கோர்டெலியா கடற்பயண நிறுவனமானது M/s Waterways Leisure Tourism Pvt. Ltd என்ற ஒரு நிறுவனத்தினால் இயக்கப்படுகிறது.
இது இந்தியாவின் முதல் சுதேச (உள்நாட்டுப் பயணம்) சொகுசுப் பயணத்தை ஊக்குவிப்பதற்கும் அதனைச் சந்தைப்படுத்துவதற்கும் வேண்டி ஆரம்பிக்கப் பட்டத் ஆகும்.
இது IRCTC கழகத்தின் சுற்றுலாச் சேவைகளின் கீழ் வழங்கப்படும் பொது மக்களுக்கான வியக்கத் தக்க மற்றுமொரு ஆடம்பரமான பயணச் சேவை ஆகும்.
இந்த ஆடம்பர பயணச் சேவையானது உள்நாட்டுப் பயணமாக பயணிகளை கோவா, டையூ, கொச்சின், லட்சத்தீவு மற்றும் இலங்கை போன்ற மிகவும் பிரபலமான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் செல்லும்.