TNPSC Thervupettagam

"கோல்டன் ஸ்பைஸ்" திட்டம்

July 31 , 2026 13 hrs 0 min 41 0
  • மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா, மேகாலயாவின் லக்காடாங் மஞ்சளுக்கான "கோல்டன் ஸ்பைஸ்" திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • புவிசார் குறியீடு (GI) சான்றளிக்கப்பட்ட லக்காடாங் மஞ்சளின் மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துவதையும், மேகாலயாவை ஒரு உலகளாவிய மசாலா மையமாக நிலை நிறுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அதிக குர்குமின் கொண்ட இயற்கை மஞ்சளுக்கான உலகின் முதன்மையான மூலமாக மேகாலயா உருவெடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • இது அதன் அதிக குர்குமின் உள்ளடக்கத்திற்காக அறியப்படுகிறது.
  • இதன் குர்குமின் அளவு 7% முதல் 12% வரை உள்ளது, அதேசமயம் மஞ்சளுக்கான உலகளாவிய சராசரி சுமார் 2% முதல் 4% வரை உள்ளது.
  • குர்குமின் என்பது மஞ்சளில் உள்ள முதன்மையான உயிரியல் செயல்பாட்டுக் கலவை ஆகும் என்பதோடு இது தர மதிப்பீட்டிற்கான ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்