வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது “கோல்டு ரெஸ்பான்ஸ் 2022” எனப்படும் மாபெரும் இராணுவப் பயிற்சியினை நார்வேயில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பயிற்சியானது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு நாடுகள் மற்றும் அதன் பங்குதார நாடுகளுக்காக வேண்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நார்வேயில் நடத்தப் படுகிறது.
கோல்டு ரெஸ்பான்ஸ் என்பது வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக நார்வே நாட்டினைப் பாதுகாப்பதற்காக நார்வே மற்றும் அதன் நட்பு நாடுகள் மேற்கொள்ளும் நீண்ட திட்டமிடப்பட்ட மற்றும் பாதுகாப்புப் பயிற்சியாகும்.