கோள்களை வாழ்வதற்கு ஏற்றதாக்குவதில் துணைக் கோள்கள் (நிலவு)
February 8 , 2022 1412 days 675 0
ஒரு புதிய ஆய்வானது நிலவின் உருவாக்கத்தை ஆய்வு செய்து ஒரு சில கோள்கள் மட்டுமே ஒரு முதன்மைக் கோளினை ஒத்த ஓரளவு பெரிய துணைக் கோள்களை உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.
நிலவானது நமது பூமியின் உயிரியல் மூலக்கூறுகளின் உயிரியல் சுழற்சி மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பகல் நேரத்தின் நீளத்தினையும் கடல் அலைகளையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும் பூமியின் சுழல் அச்சினை உறுதிப்படுத்துவதன் மூலம் உயிர்கள் உருவாகி வளர்ச்சியடைவதற்கு ஏற்ற ஒரு சூழலை வழங்கி பூமியின் பருவநிலைக்குப் பெரும் பங்கினை வழங்குகிறது.
பூமியில் வாழ்வதற்கு நிலவு மிகவும் முக்கியமானது என்பதால் மற்றக் கிரகங்களில் உயிர் வாழ்வதற்கு ஒரு துணைக்கோள் ஆனது (நிலவு) ஒரு சாத்தியமிக்க நன்மை பயக்கும் ஓர் அம்சமாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.