TNPSC Thervupettagam

கோழிப் பண்ணைகளுக்கான புதிய விதிகள்

September 2 , 2021 1433 days 1312 0
  • வேளாண் அமைச்சகத்தின் கீழான கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத் துறையானது கோழிப் பண்ணைகளுக்கான ஒரு புதிய வழிகாட்டுதல் தொகுப்பினை வெளியிட்டுள்ளது.
  • பண்ணையிலுள்ள கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இது கோழிப் பண்ணைகளை  வகைப்படுத்துகிறது.
    • சிறு பண்ணை – 5000 முதல் 25000 வரையிலான கோழிகள்
    • நடுத்தரப் பண்ணை – 25000 முதல் 1 லட்சம் வரையிலான கோழிகள்
    • பெரிய பண்ணை – 1 லட்சத்திற்கும் மேலான கோழிகள்
  • ஒரு பண்ணையானது,
    • குடியிருப்புப் பகுதியிலிருந்து 500 மீட்டருக்கு அப்பாலும்,
    • ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும்
    • தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும் மற்றும்
    • கிராம நடைபாதைகள் மற்றும் கிராமச் சாலைகளிலிருந்து 10-15 மீட்டர்கள் தொலைவிலும் அமைக்கப்பட வேண்டும்.
  • இந்தப் புதிய விதிமுறையின் கீழ், நடுத்தர அளவிலான கோழிப் பண்ணையினை வைத்துள்ள ஒரு உரிமையாளர் தண்ணீர்ச் சட்டம், 1974 மற்றும் காற்றுச் சட்டம், 1981 ஆகியவற்றின் கீழ் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒரு அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும்.
  • இந்த அனுமதியானது 15 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும்.
  • கால்நடை வளர்ப்புத் துறையானது மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அளவில் இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்