TNPSC Thervupettagam

கோவா புலிகள் சரணாலயம்

November 30 , 2025 5 days 32 0
  • உச்ச நீதிமன்றக் குழுவானது, படிப்படியாக கோவா புலிகள் சரணாலயத்தை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • முதல் கட்டத்தில், நேத்ராவளி மற்றும் கோடிகாவோ வனவிலங்குச் சரணாலயங்கள் உட்பட 468.6 சதுர கி.மீ. பரப்பளவு அறிவிக்கப்படும்.
  • இரண்டாவது கட்டத்தில், மகாதேய் வனவிலங்குச் சரணாலயம் உட்பட 208 சதுர கி.மீ. பரப்பளவினை அறிவிப்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படலாம்.
  • இந்தப் பகுதிகள் கர்நாடகாவின் காளி புலிகள் சரணாலயத்துடன் இணைந்து, 1,814 சதுர கி.மீ. அளவிலான ஒருங்கிணைந்த நிலப்பரப்பை உருவாக்கும்.
  • முக்கிய மண்டலங்கள் கண்டிப்பான முறையில் பாதுகாக்கப்படுவதோடு, புலிகள் வளங் காப்பிற்கான நிதி மற்றும் ஆதரவை உறுதி செய்து, இடையக/தாங்கு மண்டலங்களில் வரையறுக்கப்பட்ட மனிதச் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்