1961 ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுவிக்கப் பட்டதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கோவா போர்த்துகீசியக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
1510 ஆம் ஆண்டு முதல் 450 ஆண்டுகளுக்கும் மேலாக போர்த்துகீசியர்கள் கோவாவை ஆட்சி செய்தனர்.
விஜய் நடவடிக்கை (1961) என்பது கோவா, டாமன் மற்றும் டையூவை விடுவிப்பதற்காக இந்திய காலாட்படை, கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கை சுமார் 36 மணி நேரத்தில் நிறைவடைந்தது, மேலும் போர்த்துகீசிய ஆளுநர் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று சரணடைந்தார்.