கோவாக்ஸ் உலகளாவிய தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு 7.5 மில்லியன் என்ற அளவில் மாடர்னாவின் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப் பட உள்ளன.
மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சிப்லா நிறுவனத்திற்கு மாடர்னாவின் கோவிட்-19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
கோவாக்ஸ் என்பது தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான உலகளாவியக் கூட்டமைப்பு, தொற்றுநோய்த் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கானக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து செயல்படுத்தும் ஒரு உலகளாவிய தடுப்பூசி விநியோகத் திட்டமாகும்.