கோவிட்-19 தடுப்பு மருந்துகளை கலந்து பயன்படுத்துதல்
June 5 , 2021 1625 days 699 0
ஆஸ்ட்ராசெனிகா, ஃபைசர் மற்றும் மாடெர்னா ஆகிய கோவிட்-19 தடுப்பு மருந்துகளை இரு தவணைகளில் மாற்றி மாற்றி கலந்து பயன்படுத்துவதற்கு கனடா நாடானது பரிந்துரை செய்துள்ளது.
நோய் எதிர்ப்பு மீதான தேசிய ஆலோசனைக் குழுவானது சில குறிப்பிட்ட சமயங்களில் ஆக்ஸ்போர்டின் ஆஸ்ட்ராசெனிகா, பயோன்டெக்கின் ஃபைசர் (அ) மாடெர்னா மருந்துகளை கலந்து பயன்படுத்த கனடா மக்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
ஆஸ்ட்ராஜெனிகா மற்றும் ஃபைசர் தடுப்பு மருந்துகளை கலந்து உபயோகிப்பது பாதுகாப்பானது எனவும் மேலும் தொற்று நோயினைத் தடுப்பதில் அது சிறந்த ஒரு செயல்திறனைக் கொண்டிருக்கும் எனவும் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
முதல் தவணையில் ஆஸ்ட்ராஜெனிகா மருந்தினை எடுத்துக் கொண்டு இரண்டாவது தவணையில் மாடெர்னா (அ) பைசர் மருந்தினை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப் பட்டுள்ளது.