TNPSC Thervupettagam

கோவிட் - 19 தொற்றால் இறந்த முதல் மத்திய அமைச்சர்

September 28 , 2020 1781 days 673 0
  • கோவிட் - 19 தொற்று உறுதியான நிலையில் மத்திய இரயில்வே இணை அமைச்சரும் கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் அங்காடி (65) அவர்கள் காலமானார்.
  • கொரோனா தீநுண்மியால் இறந்த முதல் மத்திய அமைச்சர் இவராவார்.
  • இவர் பெலகாவி தொகுதியில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினரானவர் ஆவார்.
  • கன்னியாகுமரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எச். வசந்த குமார் அவர்கள் கோவிட் - 19 தொற்றால் இறந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
  • எனவே, 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடைத்தேர்தலைக் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காணவிருக்கிறது.
  • முன்னதாக, 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இத்தொகுதி இடைத்தேர்தலைக் கண்டது.
  • இந்தத் தேர்தல் முன்னாள் முதல்வர் கே.காமராஜர் அவர்களின் அரசியல் வருகையைக் குறித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்