கோவிட்-19 தொற்றிற்கு எதிரான தடுப்பூசி மற்றும் மாத்திரை
December 30 , 2021 1333 days 621 0
கோர்பிவாக்ஸ் மற்றும் கோவோவாக்ஸ் ஆகிய கோவிட் தொற்று தடுப்பூசிகள் மற்றும் மோல்னுபிராவிர் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆகியவற்றை அவசரக் காலங்களில் இளம்பருவத்தினருக்கு செலுத்துவதற்காக வேண்டி அதன் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு பயன்பாட்டிற்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
கோர்பிவாக்ஸ் தடுப்பூசியானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் RBD துணைப் புரத அலகு தடுப்பூசி ஆகும்.
இது ஹைதராபாத்திலுள்ள பயோலாஜிகல்-இ என்ற ஒரு நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டது.
கோவோவாக்ஸ் எனும் நுண்பொருள் தடுப்பூசியானது புனேயிலுள்ள இந்திய சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட உள்ளது.
மோல்னுபிராவிர் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தானது, இளம்பருவத்தினருக்கு அவசர காலங்களில் செலுத்துவதற்காக கட்டுப்பாட்டுடன் கூடிய பயன்பாட்டிற்காக வேண்டி இந்தியாவில் 13 நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட உள்ளது.