கோவிட்-19 பெருந்தொற்று காலங்களின் போது இந்தியாவில் பதிவான உயிர் இழப்புகள்
May 12 , 2025 89 days 114 0
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டில் சுமார் 21 லட்சம் உயிரி இழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிறப்பு மற்றும் உயிரிழப்புகளின் பதிவுகள் காட்டுகின்றன.
இந்த எண்ணிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட 3.32 லட்சம் என்ற அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கோவிட்-19 தளத்தின் முகப்பு பக்கத்தில் அதிகாரப்பூர்வ மொத்தப் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5.33 லட்சமாக இருந்தது.
2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் ஒரு அறிக்கையானது, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பதிவான "அதிகப்படியான" உயிர் இழப்புகளின் எண்ணிக்கையை சுமார் 47 லட்சமாகக் குறிப்பிடுகிறது.
அந்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் 4.8 லட்சமாகப் பதிவான அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை விட இது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகும்.
அந்த ஆண்டு நாட்டில் 1.02 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய ஆண்டில் (2020) பதிவு செய்யப்பட்ட 81.15 லட்சம் உயிரிழப்புகளை விட 21 லட்சம் அதிகமாகும்.