TNPSC Thervupettagam

கோவிட் – 19 குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு

April 11 , 2020 1933 days 658 0
  • கோவிட் – 19 தொற்றிற்காக நடத்தப்படும் ஆய்விற்கு நோயாளிகளிடமிருந்து கட்டணம் (ரூ. 4500) ஏதும் வசூலிக்கக் கூடாது என்று தனியார் மருத்துவ ஆய்வகங்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. 
  • மேலும் கரோனா தொற்று குறித்த சோதனையானது என்ஏபிஎல் (NABL - National Accreditation Board for Testing and Calibration Laboratories) ஆய்வகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் அல்லது உலகச் சுகாதார அமைப்பு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேணடும் என்றும் இந்தத் சோதனைக்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக ஒரு நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் இந்த அமர்வு கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்