கோவிட் – 19 தொற்று நோய்க்கு ஆதரவாக தளவாடத் தொழிற்சாலைகள்
April 9 , 2020 1968 days 723 0
நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் பொருட்கள் உற்பத்தியை நிர்வகிக்கும் தளவாடத் தொழிற்சாலை வாரியமானது தனிமைப்படுத்துதல் அறைகளை அமைப்பதற்காக “மாற்றியமைக்கப்பட்ட கூடாரங்களை” அமைக்க இருக்கின்றது.
“மாற்றியமைக்கப்பட்ட கூடாரங்கள்” என்ற கருத்தாக்கமானது கான்பூரில் உள்ள தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையினால் கொண்டு வரப்பட்டதாகும்.
இந்தக் கூடாரமானது பாலி விஸ்காஸ் (மரக்கூழ்) எனும் ஒன்றினால் செய்யப் பட்டதாகும். இது நீர் புகாத தன்மை கொண்டதாகவும் விளங்குகின்றது.
தளவாடத் தொழிற்சாலைகள் கை காப்பான் திரவங்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் அரவங்காட்டில் உள்ள தளவாடத் தொழிற்சாலையானது கை காப்பான் திரவங்களை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இட்டார்சியில் உள்ள தளவாடத் தொழிற்சாலை மற்றும் மகாராஷ்டிராவின் பாந்த்ராவில் உள்ள தளவாடத் தொழிற்சாலை ஆகியவை தினசரியாக கை காப்பான் திரவங்களை வழங்குகின்றன.