கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்து சோதனைக்காக வேண்டி இந்தியா + 5
October 10 , 2020 1927 days 799 0
புத்தாக்கத்திற்கான கொள்ளை நோய்த் தடுப்புத் தயார் நிலையின் மீதான கூட்டிணைவின் (CEPI - Coalition of Epidemic Preparedness for Innovation) உலகளாவிய முன்னெடுப்பானது 6 ஆய்வகங்களை அடையாளம் கண்டுள்ளது.
பிரிட்டன், நெதர்லாந்து, இத்தாலி, கனடா, வங்க தேசம் மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகளில் இந்த ஆய்வகங்கள் உள்ளன.
இந்தியாவின் THSTI ஆய்வகமானது CEPI-ன் உலகளாவிய அமைப்பின் கீழ் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
THSTI என்பது உருமாற்றம் கொண்ட சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமாகும்.
இது உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி மையமாகும்.
CEPI
இதன் தலைமையகம் நார்வேயில் அமைந்துள்ளது.
இது புதிதுபுதிதாக அதிகரித்து வரும் தொற்று நோய்களுக்கு எதிராக ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் தடுப்பு மருந்துகளை மேம்படுத்துவதற்கு வேண்டிய நிதியினை அளிப்பதற்காக நன்கொடைகளைப் பெற்றுத் தரும் ஒரு அமைப்பாகும்.
CEPI ஆனது உலக சுகாதார அமைப்பின் “முன்னுரிமைச் செயல்திட்ட நோய்களின்” (Blueprint Priority Diseases) மீது கவனம் செலுத்துகின்றது.