கோஸ்டல் லோக்கல் ஏரியா வங்கிக்கு அட்டவணையிடப்பட்ட வங்கி அந்தஸ்து
September 14 , 2026 15 hrs 0 min 13 0
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-இன் இரண்டாவது அட்டவணையில் கோஸ்டல் லோக்கல் ஏரியா வங்கி லிமிடெட் சேர்க்கப்பட்டு, RBI அறிவிப்பின் மூலம் அட்டவணையிடப் பட்ட வங்கி (Scheduled Bank) அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, கடந்த 26 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இது தற்போது 12 மாவட்டங்களில் 57 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மற்றும் பிரகாசம் மற்றும் தெலங்கானாவின் கம்மம் ஆகிய இடங்களுக்கு 13 கூடுதல் கிளைகளுடன் விரிவுபடுத்த சமீபத்தில் இது RBI-யின் ஒப்புதலைப் பெற்றது.
அட்டவணையிடப்பட்ட வங்கி என்ற அந்தஸ்தானது, புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன வைப்பீட்டாளர்களை ஈர்க்கவும், நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு (CASA) வைப்புகளை அதிகரிக்கவும் இந்த வங்கிக்கு உதவும்.