இந்தியக் கணினி அவசரகால நடவடிக்கைக் குழு (CERT-In) வாட்ஸ்அப் பயனர்களை குறி வைத்து செயல்படும் ஒரு அச்சுறுத்தல் பிரச்சாரம் குறித்து ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் ஆனது, வாட்ஸ்அப் கணக்குகளை முடக்க தீங்கிழைக்கும் காரணிகளைப் பயன்படுத்துகின்ற கோஸ்ட்பேரிங் என்ற புதிய நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
தீங்கிழைக்கும் காரணிகள் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகாரம் இல்லாமல் கையகப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை இணைத்தலுக்கான குறியீடுகளை உள்ளிட செய்கிறது.
இது இணைய வெளிக் குற்றவாளிகள் கடவுச்சொற்கள் அல்லது SIM பரிமாற்றங்கள் என அதனுடைய தேவையுமில்லாமல் வாட்ஸ்அப் கணக்குகளை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.